புதிய தார் சாலைக்கு பூமி பூஜை
வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமத்திற்கு புதிய சாலை கிராம மக்கள் தமிழக அரசு நன்றி கூறி வருகின்றனர்.
Update: 2024-03-22 10:47 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரியாகுஞ்சூர் கிராமத்திற்கு சாலை கேட்டு மூன்று தலைமுறை ஆண்டுகால கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.1கோடியே 65 இலட்சம் மதிப்பில் சாலைக்கு டெண்டர் விடப்பட்ட சாலைக்கு இன்று காலை பூமி பூஜை போட்டு பணி துவங்கியது. சாலை வருவதற்கு பெரிதும் உதவிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர், மு.பெ.கிரி அவர்களுக்கும்,திமுக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் அவர்களுக்கு மாவட்ட வனத்துறை அலுவலர் அவர்களுக்கும் தமிழக அரசிற்கும் அரியாக்குஞ்சூர் ஊராட்சி கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து வருகின்றனர் இந்த நிகழ்வில் கோவிந்தன், ராஜா வேலுமணி சதீஷ் மற்றும்திமுக நிர்வாகிகள் தோழமை கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.