வார சந்தைக்கு சுற்றுசுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தைக்கு சுற்றுசுவர் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-05 10:29 GMT
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாயனூர் பகுதியில் உள்ள வார சந்தையில் சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பு இன்றி இருந்தது. இந்த வார சந்தைக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதிகளை ஒதுக்கி தந்தார். இதன் அடிப்படையில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் இன்று சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, வார சந்தை வளாகத்தில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர். பூமி பூஜை நிறைவடைந்த பிறகு அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம் எல் ஏ சிவகாமசுந்தரி.
Tags:    

Similar News