நியாவிலைகட்டிடம் கட்ட பூமி பூஜை

சங்கிபூசாரியூரில் ரூ 10 லட்சம் மதிப்பில், நியாய விலை கட்டிடம் கட்ட பூமி பூஜையில் பங்கேற்ற எம்பி ஜோதிமணி.

Update: 2023-12-01 00:55 GMT

நியாவிலைகட்டிடம் கட்ட பூமி பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கிபூசாரியூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் நியாய விலை கட்டிடம் கட்ட பூமி பூஜை. கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தரகம்பட்டி ஊராட்சியில் உள்ள சங்கி பூசாரி ஊரில் நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்ற கரூர் எம்பி ஜோதிமணி அதற்கான பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கடவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி செல்வராஜ், கீழப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் கோமதி பிரபாகரன், இரண்டாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.
Tags:    

Similar News