உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

மேட்டூர் அருகே கொளத்தூரில் ரூ.3.75 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

Update: 2024-02-09 11:25 GMT

 மேட்டூர் அருகே கொளத்தூரில் ரூ.3.75 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.   

மேட்டூர் அருகே கொளத்தூரில் 3.75 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லக்கம்பட்டி ஊராட்சி ,பெருமாள் கோவில் நத்தம் பிரிவு சாலையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி .எம். செல்வகணபதி வழிகாட்டுதலின்படி, ஒன்றிய கவுன்சிலர் எம்.சுருதி மூர்த்தி தீவிர முயற்சியில் நபார்டு வங்கி திட்டம் மூலம் 3.75 கோடி மதிப்பில் புதிய உயர்மட்டம் பாலம் அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றது. இப்பணியினை கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் ராமநாதன், 2வது வார்டு உறுப்பினர் மாரிமுத்து, அவை தலைவர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி தேவராஜ் கிளை செயலாளர்கள் எல்.பி. பழனிசாமி , மெம்பர் மணி, கணேசன்,தமிழரசன், மணி , மயில்சாமி,பொன்னுசாமி, சேகர், சுப்பிரமணி,யுவராஜ், ராமலிங்கம், அன்பழகன் உள்பட பொதுமக்கள் ஏராளமானோம் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News