மயான மேம்பாட்டுக்கு பூமிபூஜை
மயான மேம்பாட்டுக்கு பூமிபூஜை நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 06:23 GMT
பூமி பூஜை
ஆதிதிராவிடர் நலத்துறை குக்கிராம மயான மேம்பாட்டு அயோத்திதாஸ் திட்டத்தின் மூலம் ரூ.23 லட்சம் மதிப்பில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சி எழுவனம்பட்டி அம்பேத்கார்நகர், வி.உச்சப்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள மயானங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா மணிவண்ணன் தலைமை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லதாஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன்பூமி பூஜை நடத்திபணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பரமன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு நிர்வாகி ராஜ்குமார், நிர்வாகிகள் நரசிம்மன், சதிஷ், பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.