திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சைக்கிள் பேரணி
மாவட்ட ஆட்சியர் தலைமையில் 100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
Update: 2024-04-05 04:46 GMT
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (05.04.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து நகரின் முக்கிய வீதியான மாடவீதி, காந்தி சிலை, மத்திய பேருந்து நிலையம், அண்ணன் நுழைவாயில் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.