கிருஷ்ணராயபுரத்தில் சந்தைகள் நடத்த ஏலம்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனூர், லாலாபேட்டை, கொசூர், இரும்புதிபட்டி கால்நடை சந்தை, இரும்பூதிப்பட்டி சந்தைகளில், வரி வசூல் செய்யும் குத்தகை உரிமை பெறுவதற்கான ஏலம் நடைபெற்றது.

Update: 2024-02-07 07:21 GMT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாயனூர், லாலாபேட்டை, கொசூர், இரும்புதிபட்டி கால்நடை சந்தை, இரும்பூதிப்பட்டி சில்லறை சந்தைகளில், வரி வசூல் செய்யும் குத்தகை உரிமை பெறுவதற்கான, ஏலம் விடும் நிகழ்ச்சி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்,ஒன்றிய குழு தலைவர் சுமித்ரா தேவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஷ்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஏலம் எடுக்க சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது,ஒவ்வொரு சந்தை பெயரை குறிப்பிட்டு வசூல் செய்யும் உரிமை பெறுவதற்கான அடிப்படை ஏலத் தொகையை அறிவித்தனர். ஏலகாரர்கள் தங்களுக்கு கட்டுப்படியான நிலை வரும் வரை, ஏலத் தொகையை உயர்த்தி கேட்டனர். இதன் அடிப்படையில், மாயனூர் சந்தை, ஓசூர் சந்தை மற்றும் இரும்பூதிப்பட்டி கால்நடை சந்தை ஆகிய சந்தைகளுக்கு மட்டும் ஏலதாரர்கள் ஏலம் கேட்டனர். மற்ற லாலாபேட்டை மற்றும் இரும்பூதிப்பட்டி சில்லறை சந்தைகளுக்கு யாரும் ஏலம் கோராததால் அந்த இரண்டு சந்தைகளுக்கும் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது

. இதன் அடிப்படையில் மாயனூர் சந்தைக்கு அதிகப்படியாக 2,21,200- ரூபாய்க்கு கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏலம் கோரியதால் அவருக்கு இந்த சந்தை உறுதி செய்யப்பட்டது. இதே போல ஓசூர் சந்தையை ரூ.1,79,200- ஐயர் என்பவரும், இரும்பூதிபட்டி கால்நடை சந்தை 2 லட்சத்து 3 ஆயிரத்திற்கு, ஜெயவேல் என்பவருக்கும் உறுதி செய்யப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் முழு தொகையை செலுத்தி தங்கள் ஏல உரிமைக்கான சான்றிணை பெற்று சென்றனர்.

Tags:    

Similar News