பீகார் மாநில தொழிலாளி குத்தி கொலை - தொழிலாளர்கள் போராட்டம்
திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகாரை சேர்ந்த வட மாநில தொழிலாளர் ஆகாஷ் குத்தி கொலை . திருப்பூர் அருகே கணியாம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது.இதில் 300க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று இரவு பணி முடித்து பனியன் நிறுவனத்திற்கு முன்புறம் பனியன் தொழிலாளி ஆகாஷ் என்பவர் சென்றபோது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் ஆகாஷின் கையில் இருந்தசெல்போனைபறித்துள்ளனர்.இதில் நிலை தடுமாறிய ஆகாஷ் சத்தமிடவே வட மாநில இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த சக வட மாநில தொழிலாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறி பின்னலாடை நிறுவனத்தின் உட்புறப் பகுதியில் நின்று கொண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுருகன் பூண்டி போலீசார் வட மாநில தொழிலாளர்கள் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட மாநில தொழிலாளர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கணியம்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளிகளை கைது செய்த பின்னரே உடலை பெற்றுக் கொள்வதாக கூறி வட மாநில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வஞ்சிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.