பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மலம்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.;

Update: 2023-10-25 06:36 GMT

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் சேர்ந்தவர் கருப்பையா வயது (54) விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த செல்வம் என்பவரும் ஆயுத பூஜை பண்டிகைக்காக பொருட்கள் வாங்க நேற்று முன்தினம் மலம்பட்டிக்கு பைக்கில் சென்றனர். இலுப்பூர் மாத்தூர் சாலையில் சென்ற போது எதிரே வேலப்புடையான் பட்டியைச் சேர்ந்த தேவராஜ் வயது (28) என்பவர் ஓட்டி வந்த பைக் உடன் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தலையில் பழுத்த காயமடைந்த கருப்பையா அதே இடத்தில் இறந்தார். செல்வம் படுகாயத்துடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News