கரூர்: நேருக்கு நேர் மோதல்

சிக்னலை வெளிப்படுத்தாமல் டூவீலரை திருப்பியதால், திடீரென விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-18 16:04 GMT

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டம், சேர்வைக்காரன்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் வயது 27. அதே பகுதியைச் சேர்ந்த சாமியப்பன் மகள் சுதா வயது 28 இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் கரூர் - திண்டுக்கல் சாலையில் மே 16ஆம் தேதி இரவு 9 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் வெள்ளியணை தீபா மளிகை ஸ்டோர் அருகே சென்ற போது, இவர்களை முந்தி சென்ற, கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த அசோக் ராஜ் மகன் ஹரிராஜ் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற டூவீலரை, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், டூவீலரை திடீரென வலது புறம் திருப்பிதால், பின்னால் வந்த காளிதாசன் வாகனம் ஹரிராஜ் ஓட்டிய டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு டூவீலர்களும் கீழே விழுந்ததில் காளிதாஸ், சுதா, ஹரிராஜ் ஆகிய மூன்று பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காளிதாஸ் உறவினர் பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை சாலை விதிகளை கடைபிடிக்காமல் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஹரிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags:    

Similar News