பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2024-04-09 02:02 GMT

பைல் படம் 

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் மகன் ரமேஷ்குமார் (22). இவர் நேற்று பிற்பகலில் மோட்டார் பைக்கில் தூத்துக்குடி வந்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலையில் தருவைகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ரமேஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News