பைக் திருட்டு வழக்கு: இளைஞர் கைது
திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்து 9 பைக் பறிமுதல் செய்தனர்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-13 13:29 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பைக்
தஞ்சாவூரில், இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய சரகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா மேற்பார்வையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவலர்கள் உள்ளடக்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிர விசாரணை நடத்தி திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து விசாரணை நடத்தி திருட்டுப் போன 9 மோட்டார் சைக்கிள்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.