காரைக்குடியில் உயிர்ம வேளாண்மை கருத்தரங்கு
காரைக்குடியில் உயிர்ம வேளாண்மை கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-14 14:38 GMT
சிவகங்கை மாவட்ட வேளாண்மைத் துறையின் சாா்பில் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் கிராமியப் பயிற்சி மையத்தில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 2023-2024-இன் கீழ் உயிா்ம வேளாண்மைக் கருத்தரங்கு, கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளுக்கு தலைமைவகித்து பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 14 அங்கக வேளாண்மை குழுக்களுக்கு உயிா்ம வேளாண்மை சான்றிதழ்களையும், முதலமைச்சரின் மண்ணுயிா் காப்போம் 2024-2025 திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள்களை வழங்கியும்,
வேளாண் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பார்வையிட்டார்