ஈரோடு மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
ஈரோடு மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 11:43 GMT
தமிழகம் முழுவதிலும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூர் என 3 வனக்கோட்டங்கள் உள்ளன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பறவைகள் அதிகமாக வந்து செல்லும் 19 இடங்கள் கண்டறியப்பட்டு கணக்கெடுக்கும் மணி நடைபெற்றது. காலை, மாலை என இருவேளை நடக்கும் இந்த பணியில் 140 க்கும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் ,
பறவைகள் இனங்கள், சத்தம் போன்ற வற்றை வைத்து கணக்கெடுப்பதாகவும் , பாம்புதாரா,சிறிய மற்றும் பெரிய நீர் காகம், பள்ளி ஆழகு கூழகடா, வெள்ளை அறியான் முக்கன், தாழை கோழி உள்ளிட்ட பறவைகள் மற்றும் பறவைகளின் வருகை,
அவை வாழ்வதற்கான சூழல் எவ்வாறு அமைந் துள்ளது புதிதாக வரும் பறவைகள் அரிய பறவைகள் போன்றவற்றை கண்டறிய முடியும் என்றனர்.