முன்னாள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
இடங்கணசாலை நகராட்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது.;
Update: 2024-01-17 10:46 GMT
இடங்கணசாலை நகராட்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு இடங்கணசாலை நகரச் செயலாளர் சிவலிங்கம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.