முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திருச்சியில் பாஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Update: 2023-12-25 14:57 GMT

திருச்சியில் பாஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

முன்னாள்பாரத பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்த தினம் மற்றும் நல்லாட்சி தின விழா கொண்டாட்டம் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் பஞ்சாயத்து எழில் நகரில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் முன்னாள்பாரத பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News