திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர் பரப்புரை
திருப்பூரில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ஏ பி முருகானந்தம் நல்லூர்,மணியகாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையாற்றினார்.
பாஜக வேட்பாளர் முருகானந்தம், தான் தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வெளியான வீடியோ பாதி எடிட் செய்து வெளியிடப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து தான் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தி
ருப்பூர் நல்லூர், மனியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன். அந்த காட்சியை பார்த்து விட்டு சும்மா போக முடியாது.
அதனால் மரியாதையாக பேசுங்கள் என்று கூறியதாகவும், அதில் பாதி வீடியோவை எடித் செய்து போட்டிருக்கிறார்கள். பறக்கும்படை கேமரா மேன் வீடியோவை ஐந்து நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு அளித்திருபப்தன் மூலம் திட்டமிட்டு இதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது.
இதுகுறித்து நானும் புகார் அளிக்க உள்ளேன். தொடர்ந்து என்னை குறிவைத்து துன்புறுத்துவதன் காரணம் என்ன? என்றும் இதை சட்டப்படி அணுக இருப்பதாகவும் கூறினார்