பாஜக வேட்பாளர் நந்தினி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

விளவங்கோடு பா.ஜ., வேட்பாளர் நந்தினி மாலைக்கோடு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Update: 2024-04-10 14:13 GMT

விளவங்கோடு பா.ஜ., வேட்பாளர் நந்தினி மாலைக்கோடு பகுதியில் கூட்டணி கட்சியினருடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடும் நந்தினி ஒவ்வொரு பகுதியாக மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். விளாத்துறை மற்றும் மாலைக்கோடு பகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வீடுகளிலும், கடை வீதிகளிலும் நடந்து சென்று மக்களை சந்தித்தார்.

அவருடன் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். நேற்று மார்த்தாண்டம் பகுதியில் நடந்த கூட்டணி கட்சிக ளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கட்சியின் மூத்த தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பணிகளுக் கான ஆலோசனை நடத்தினர்.

Tags:    

Similar News