பா.ஜ., மாவட்ட தலைவர் பிறந்த நாள் விழா

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் 60வது நடந்தது.

Update: 2024-04-08 05:06 GMT

பிறந்த நாள் விழா

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் கலிவரதன் 60வது பிறந்த நாள் மற்றும் கட்சியின் தொடக்க நாள் விழா நடந்தது. விழாவையொட்டி, வடகரைத் தாழனுார், கடகால் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, இளைஞர் அணி திருமால், கதிரவன் வரவேற்றனர். மாவட்ட தலைவர் கலிவரதன் அவரது மனைவி கோமதி ஆகியோர் பா.ஜ., தலைவர்களின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். பா.ம.க., வேட்பாளர் முரளி சங்கர், மாவட்ட செயலாளர் பால சக்தி, வழக்கறிஞர் சரவணகுமார், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., தலைவர் அருள், பொதுச் செயலாளர்கள் முரளி, சதாசிவம், தங்கம், பொருளாளர் குமாரசாமி, தொழிலதிபர்கள் முருகன், கணேஷ், மணிமாறன், மண்டல் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், செல்வகுமார், வெங்கடேசன், நகர தலைவர் பத்ரி நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News