பா.ஜ., விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது;
Update: 2023-12-28 06:54 GMT
ஆர்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ஜ., விவசாய அணி சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஜெயதுரை, மாவட்ட செயலார் ஹரி, விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் அருணகிரி, கயல்விழி மாவட்ட துணை தலைவர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமசாமி வரவேற்றார்.