ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் பாஜகவின் கொடி ஏறும்: சீனிவாசன் பேட்டி

ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் பாஜகவின் கொடி ஏறும் என மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-01 13:21 GMT

சீனிவாசன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இன்று நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட நாள் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு தியாகிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில் இன்று தமிழ்நாடு என பெயர் வர 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து விருதுநகரில் உயிர்நீத்த சங்கரலிங்கனாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சங்கரலிங்கனாரின் திருஉருவசிலைக்கு மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது தமிழ்நாடு என பெயர் வைப்பதற்கு ஆதரவுதறாத கட்சிகள் தான் திமுக, திக என்றும் தமிழ்நாடு என உருவானதில் திமுகவின் பங்கு இல்லை என்றும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்கள் அனைத்தும் அனுமதி வாங்கிதான் வைக்கப்பட்டுள்ளதா என்றும்,திமுக ,விசிக கொடிகள் இருக்கும் இடத்தில் பாஜக கொடி பறந்தால் என்ன குற்றம் பிஜேபி கொடி பறந்தால் திமுகவினருக்கு ஏதோ பயம் வருகிறது பாஜகவினருக்கு அச்சம் ஏற்படுத்துவதற்காக திமுக கொடி கம்பம் வைக்க அனுமதி மறுக்கவில்லை என்றும் திமுக பாஜக வை பார்த்து பயப்படுவதன் காரணமாகவே கொடி கம்பம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,தமிழகத்தில் பாஜக கொடி பறக்க கூடாது என திமுக நிலை மாற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் பாஜகவின் கொடி ஏறும் எனவும் திமுகவின் பத்தாயிரம் கோடிக்கு சமமானது அந்த ஒரு கொடி எனவும் கூறினார் பாஜகவில் இருப்பவர்கள் சமூக விரோதிகள் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதற்கு பதிலளித்தவர் பாஜகவில் இருப்பவர்கள் சமூக விரோதி என்பதற்கான ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் அதனை பாஜகவினர் தடுக்கப்போவதில்லை என கூறினார் தமிழகத்தில் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் ,மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்
Tags:    

Similar News