ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் கைது
தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் விரட்டி விரட்டி குந்துகட்டாக கைது செய்த சம்பவத்தால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் அனுமதி மறுத்ததை மீறி தமிழக அரசை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் விரட்டி விரட்டி குந்துகட்டாக கைது செய்த சம்பவத்தால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து தேனி மாவட்ட பாஜக தலைவர் பிசி பாண்டியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியின்றி வந்த பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்தும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றதால் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை விரட்டி விரட்டி போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சம்பவத்தால் தேனி பழைய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது