பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் சிபிஎம் ஊழியர் கூட்டத்தில் பேச்சு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ., அதிமுக.,வை தோற்கடிக்க வேண்டும் என விழுப்புரத்தில் நடந்த சிபிஎம் ஊழியர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-03-02 15:05 GMT

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். சிபிஎம் ஊழியர் கூட்டத்தில் பேச்சு. விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரண்டு மையங்களில் சனிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் பாஜக, அதிமுகவை தோற்கடிகத்து "இந்தியா" கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பது குறித்த ஊழியர் கூட்டம் நடைபெற்றது. ஊழியர் கூட்டத்திற்கு விழுப்புரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், திண்டிவனத்தில் எஸ்.முத்துக்குமரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, கலந்து கொண்டு பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இந்திய நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. பாஜக ஆட்சியில் வேலையின்மையும், வறுமையும் உச்சத்திற்கும், விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வு அதல பாதாளத்திற்கும் சென்று விட்டது, ஊழல், முறைகேடுகள் அனைத்திலும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், இவற்றை மூடி மறைக்க மக்கள் மத்தியில் வெறுப்பு பேச்சு மூலம் மக்களை திசைதிருப்பி வருகின்றனர். மாநில உரிமைகளைப் பறித்து பேரிடர் காலத்தில் ஒரு பைசா கூட உதவி செய்யாத கொடுமை, இத்தகைய பாஜக ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடிh யோடு வீழ்த்த வேண்டும். அதனோடு கூட்டு சேர்ந்து கடந்த ஐந்து ஆண்டு காலமும் தலையாட்டி பொம்மையாக செயல்பட்ட அதிமுக தற்போது பாஜகவிடமிருந்து விலகி நிற்பதாக நாடகமாடுவதை தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை. எனவே, அதிமுகவையும் வரும் தேர்தலில் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஜி.ராஜேந்திரன், எஸ்.கீதா, ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News