2 ஆண்டுகளாக திருட்டு - பாஜக நிர்வாகி கைது

2 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்து கோடீஸ்வரரான பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-28 14:50 GMT

பாஜக நிர்வாகி கைது

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஆள் இல்லாத வீடுகளில் நோட்டமிட்டு இரவில் பூட்டை உடைத்து நகை பணம் திருடி தலைமறைவாக இருந்து வந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 51 லட்சம் மதிப்பிலான 85 சவரன் உருக்கிய தங்க கட்டிகளை ஊத்துக்கோட்டை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை உருக்கி விற்பனை செய்து ஒரு கோடி ரூபாய் அளவில் கிராமத்தில் சொகுசான வீடு கட்டியுள்ளார்.

Tags:    

Similar News