ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக கண்டன ஆர்பாட்டம்

Update: 2023-11-22 09:52 GMT
ஆர்ப்பாட்டம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பாண்டியன் நகரில் பாஜக கிழக்கு மாவட்டம் ஒன்றிய தலைவர் ராமதாஸ் தலைமையிலும், மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரோசல்பட்டி பஞ்சாயத்தில் பிரதமர் மோடி கொண்டுவந்த ஜல்ஜீவன் இலவச குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் ராஜிவ் காந்தி குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி பொதுமக்களிடம் அநியாய வசூல் செய்யும் ரோசல்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், வாறுகால், சாலை, மின்விளக்கு, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும், மத்திய அரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ள அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் பயனடையும் வகையில் ரோசல்பட்டி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரோசல்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News