கேரள, தமிழக அரசுகளை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரி கேரள, தமிழக அரசுகளை கண்டித்து பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-01-12 05:35 GMT

சபரிமலையில்  தமிழக  பக்தர்கள் தாக்கப்படுவதை  தடுக்க கோரி கேரள கம்யூனிஸ்ட் மற்றும் திமுக அரசை   கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம். திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில்  சபரிமலையில்  தமிழக பக்தர்கள் தாக்கப்படுவதை கண்டித்து  மாவட்ட தலைவர்  செந்தில் வேல் தலைமையில்  அவிநாசி சாலை  புஷ்பா தியேட்டர்  அருகே  கண்டன ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது ..   மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

Advertisement

இந்த ஆர்ப்பாட்டத்தில்  சபரிமலையில்  தமிழக பக்தர்கள்   கேரளா காவல்துறையினரால் தாக்கப்படுவதை  கண்டுகொள்ளாத  கேரளா அரசை கண்டித்தும்  எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும்  கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன .. ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில்  சபரிமலையில்  தமிழக பக்தர்களுக்கு  தண்ணீர் வசதி . மருத்துவ வசதி . மற்றும் இருப்பிட வசதிகள்  கேரளா அரசு  சரிவர செய்து தரவில்லை . சாமி தரிசனத்திற்கு  ஆன்லைனில் பதிவு செய்த பிறகும்  18 மணி நேரம் காக்க வைத்துள்ளனர் என்றும்  இது போன்ற நிகழ்வுகள்  இனிமேல் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .. சபரிமலை பிரச்சனைக்கு  தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர் .மேலும் மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News