மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-02-15 06:15 GMT
ஓசூரில் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் மற்றும் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஓசூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது, குடிநீர் பிரச்சனை, வரிவிதிப்பு, மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து பாஜகவினர் கோஷங்களை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.