தேர்தலில் பிஜேபிக்கு தக்க பாடம் புகட்ட‌ வேண்டும்

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அதிமுக, பிஜேபிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

Update: 2024-03-30 04:14 GMT

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அதிமுக, பிஜேபிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் பணியாற்ற வேண்டும் என தோ்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதாித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா்நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வு குடியுாிமை சட்டம் உணவு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பலசட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டு ஆதரித்தார்.

இப்போது பிஜேபியுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி இரண்டு பேருமே நாடகமாடி மக்களை ஏமாற்ற வருவார்கள் அதற்கு இடம் அளிக்க கூடாது. நமது ஆட்சியின் சாதனைகளை வீடுகள் தோறும் எடுத்துச்சென்று கட்சிக்கும் ஆட்சிக்கும் வலிமை சேர்க்க வேண்டும் வரும் நாடாளுமன்ற தோ்தலில் திமுகவை எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது. அந்த அளவிற்கு உங்களது களப்பணிகள் சிறப்பாக அமைய வேண்டும்.  அனைத்து அணிகளும் ஓட்டு மொத்தமாக இணைந்து பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிடுகிறாா்கள்.  கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்த முறை மிகப்பொிய வெற்றியை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈட்டி தருவதற்கு பணியாற்றி முதல்வாின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

Tags:    

Similar News