பாஜக மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் பேட்டி
மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் பேட்டி அளித்தார்.
வட மாநிலங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் பாஜக, தென் மாநிலங்களிலும் அதேபோன்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து வருகிறது என்றும், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைத்து மக்கள் பணி ஆற்ற உள்ளார் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம் பேட்டியின்போது கூறியுள்ளார்.. நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம், தமது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தமது பிறந்தநாளை கொண்டாடினார்.
மேலும், வயதில் மூத்தவர்கள் உள்ளிட்டோரை, அவர்களது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து, அவர்களை வணங்கி, K.P. இராமலிங்கம் ஆசி பெற்றார். முன்னதாக இராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில், பாஜக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இதன்பின்னர், பாஜக மாநில துணைத் தலைவர் Dr. K.P. இராமலிங்கம், தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கூறிய அவர், நமது நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். தேர்தல் முடிவுக்காக பாரத தேசமே காத்துக் கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வழிகாட்டுவதற்கு/ பாதுகாப்பதற்கு/ வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்வதற்கு, இந்த நாடுதான் உலகத்திற்கு விஸ்வகுருவாக அமைய வேண்டும் என்ற உணர்வோடு பொதுமக்கள், பெருவாரியான வாக்குகளை பாஜகவுக்கு அளித்து, நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கு தமிழ்நாடு பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வட மாநில ஊடகங்கள், சமூக ஊடகங்கள் கருத்துக்கணிப்பில் பாஜக அதிகபட்சமாக 353 இடங்களை பிடிக்கும் என்று கணித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் இருக்கின்ற ஒரு சில ஊடகங்கள் அதற்கு மாற்றுக்கருத்தை கூறுகின்றனர். வட மாநில ஊடகங்கள் வெளியிடுவது கருத்துக்களாகவும், தென் மாநில ஊடகங்கள் வெளியிடுவது கருத்து திணிப்பாகவும் உள்ளது. தேர்தல் நேரத்தில், கட்சிகளின் பணப்பட்டுவாடா போன்ற நிகழ்வுகளை வைத்துத்தான் ஊடகங்கள் இவ்வாறு கருத்து தெரிவிக்கின்றன என்றும் K.P. இராமலிங்கம் கூறினார். இங்கு தியானம் செய்துவிட்டுசென்று தான் விவேகானந்தர் உலகிற்கு புதிய வழியை காட்டினார். சகோதர சகோதரிகளே என்றும் அழைத்தார். உலகம் முழுவதும் இந்துத்துவா கொள்கையை கொண்டு செல்வதற்கு அவர் ஆற்றிய உரையில், பண்பாடு, கலாச்சாரம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் புதிய விவேகானந்தராக/ இந்த சமுதாயத்தை வழிநடத்தும் மாபெரும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை பாதுகாக்க தியானம் செய்துள்ளார். அவரின் வெற்றியை எதிர்பார்த்து நாடு காத்திருக்கிறது.
மேலும், கேள்விக்கு பதில் அளித்த டாக்டர். கே.பி. இராமலிங்கம், தமிழக மக்களின் எண்ணங்களை நீண்ட காலமாக பாஜக அமைப்பு ரீதியாக அவர்களோடு இருந்து வளர்ந்து வருகிறோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்தித்தோம். எங்களைப் பொறுத்தவரை நிச்சயமாக இந்த முறை மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், எம்ஜிஆர் மிகுந்த செல்வாக்கோடு முதல்வராக இருந்தபோது, அவர் சந்தித்த 1980-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் யார் என்று அடையாளம் காட்டாத காரணத்தினால் தான் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதேபோலத்தான் பிரதமரை அடையாளம் காட்டாத INDI கூட்டணியின் கட்சிகளும் தோல்வி அடையும். தற்போது நடந்து முடிந்த தேர்தல் 543 தொகுதிகளுக்கான தேர்தல் என்பதால் தமிழகத்திலும் 39 தொகுதிகளில் பல தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் ஈடுபட்டோம். அதிமுக, திமுக குடும்பத்தில் உள்ள பெண்கள், இளைஞர்கள் ஆகியோர், பாஜகவுக்கும் நரேந்திர மோடி, அண்ணாமலை போன்றவர்களுக்கு தான் வாக்களிப்போம் என்று வாக்களித்து இருக்கிறார்கள். நாளை அளிக்கும் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்போம். எப்படி இருந்தாலும், மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பிற்கு பாஜக வரவுள்ளது. இன்றைக்கு உள்ளது போல் என்றைக்கும் நாட்டு மக்களுக்கு உழைத்துக் கொண்டிருப்போம். வெற்றி பெறாத இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றதாக கருதி மத்திய பாஜக அரசு மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் உழைப்போம். மேலும் நாட்டிற்கான முன்னேற்றத்தை கொண்டு வருவோம். பிழைக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து பாஜகவை உயர்த்தி பிடிப்பதற்கு / மேலும் வலிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வட மாநிலங்களில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவாகி வளர்ந்துள்ளதைப்போல, தமிழகத்திலும் பாஜக அசைக்க முடியாத சக்தியாக உருவாகும் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் இராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில், பாஜக- வின் தேசிய, மாநில, மாவட்ட, நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.