பாஜக தளி வடக்கு மண்டல் மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
பாஜக தளி வடக்கு மண்டல் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-01-31 11:50 GMT
ஆலோசனைக் கூட்டம்
பாஜக தளி வடக்கு மண்டல் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி வடக்கு மண்டலில் மத்திய அரசின் நலதிட்டங்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து மகளிரணி தலைவி சரளம்மா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொட்ட உப்பனூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மண்டல் தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில பொறுப்பாளர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.விழாவில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜண்ணா, இந்திராணியம்மா, மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளம்மா, மண்டல் பொது செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.