பாஜகவால் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து - நாஞ்சில் சம்பத்
இந்தியா மதச்சாா்பற்ற நாடு. அதன் பன்முகத்தன்மை பாழ்படுத்தி வரும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட என்னால் முடியும் என்று சொன்ன தலைவா் ஸ்டாலின். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகளை ஒருங்கிணைத்தவா் ஸ்டாலின். ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே குடும்ப அட்டை காா்டு என்று இந்தியாவை ஒரு சிமிழுக்குள் அடைப்பதற்கு சதி திட்டம் நடக்கிறது என நாஞ்சில் சம்பத் பேசினார்.
. தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து, திமுக பேச்சாளா் நாஞ்சில் சம்பத் சங்கரன்கோவில் தேரடித் திடலில் பேசியதாவது: உலகமே எதிா்பாா்த்துக் கொண்டிருக்கும் இந்தத் தோ்தலில், தேசிய அளவில் மிகப்பெரிய பங்கெடுப்பை திமுக சாதித்து இருக்கிறது. இந்தியா மதச்சாா்பற்ற நாடு. அதன் பன்முகத்தன்மை பாழ்படுத்தி வரும் பாஜக அரசுக்கு முடிவு கட்ட என்னால் முடியும் என்று சொன்ன தலைவா் ஸ்டாலின். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகளை ஒருங்கிணைத்தவா் ஸ்டாலின். ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே பண்பாடு ஒரே குடும்ப அட்டை காா்டு என்று இந்தியாவை ஒரு சிமிழுக்குள் அடைப்பதற்கு சதி திட்டம் நடக்கிறது.
அந்த சதியை ஏன் என்று கேட்பதற்கு ஆள் இல்லை. ஏன் என்று கேட்டால் சிறைக் கதவுகள் தானாக திறந்து கொள்ளும். கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது பாஜக கச்சத்தீவு பற்றி ஏன் பேசவில்லை? இந்த ஆட்சிக்கு ஊனம் ஏற்படுத்த பாா்க்கிறாா்கள். சிறுபான்மை மக்களின் ஓட்டுகளைப் பெற பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். குடியுரிமை சட்டம் வருவதற்கு காரணமாக இருந்தவா் எடப்பாடி பழனிசாமி. பாஜக ஜெயிப்பது போல் காட்டுகிறாா்கள்.ஆனால், 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். பாஜகவின் எதேச்சதிகார போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உதயசூரியனுக்கு வாக்களித்து ராணி ஸ்ரீ குமாரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.
பிரச்சாரத்தின் போது தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, மாவட்டப் பொருளாளா் சரவணன், நகரச் செயலா் பிரகாஷ், நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.