எல் இ டி போர்டுடன் நகர்வலம் - விருதுநகரில் பாஜகவினர் நூதன பிரச்சாரம்

விருதுநகரில் எல்இடி போர்டுடன் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு இளைஞர்கள் வாக்கு சேகரித்தது வாக்காளர்களை வெகுவாக கலந்துள்ளது.;

Update: 2024-04-18 03:04 GMT

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், காங்கிரஸ் கட்சி சார்பில் சிட்டிங் எம்பி ஆன மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். இதனால் விருதுநகரில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. விஐபி தொகுதி ஆகிவிட்ட விருதுநகரை கைப்பற்ற பல்வேறு நூதன பிரச்சாரங்களை போட்டி போட்டு செய்து வருகின்றனர்.

டீக்கடையில் நுழைந்து டீ தயார் செய்து தருதல் பரோட்டா தயாரித்து கொடுத்து அங்கேயே அமர்ந்து சாப்பிட்டும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா நாங்க வேற மாதிரி என்று நிரூபிக்கும் வகையில் விருதுநகர் பாஜக தொண்டர்களோ நவீன தொழில்நுட்பத்தை கையில் எடுத்து தங்கள் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

Advertisement

இருட்டத் தொடங்கியவுடன் வில்லிலிருந்து இலக்கை நோக்கி புறப்படும் அம்பை போல தங்கள் பிரச்சார பணியைத் துவக்குகின்றனர் பாஜகவினர். நாலடி உயரம் இல்ல எல்இடி போர்டுகளை முதுகில் ஏந்தியவாறு ராதிகா சரத்குமாருக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். ஒளிரும் விளக்கினை முதுகில் ஏந்திக் கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து இளைஞர்கள் நகர்வலம் வருவது விருதுநகர் மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது.மேலும் இந்த நூதன பிரச்சாரம் விருதுநகர் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

Tags:    

Similar News