மக்களவை தேர்தல் குறித்து பாஜக ஒன்றிய கூட்டம்

சத்தியமங்கலத்தில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து நடந்த பாஜக தெற்கு ஒன்றிய மண்டல் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.;

Update: 2024-02-25 13:13 GMT

பாஜகவில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு 

சத்தியமங்கலம் இக்கரை நெகமம் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் மண்டல் மாநாடு தெற்கு ஒன்றிய தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.   மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார், மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், சுப்பிரமணியம் நகர தலைவர் செல்வராஜ், முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து மண்டல் மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் பேசினார்கள் இந்த மாநாட்டில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் குறித்து சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பூபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஐடி வின் தலைவர் பரத் வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியம், தெற்கு ஒன்றியத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகளான கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன், ரஞ்சித் குமார், பாலகிருஷ்ணன் பவித்ரன் மற்றும் சிக்கரசம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் குமார் மண்டல பொதுச் செயலாளர்கள் சந்திரசேகரன் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News