குட்டிகரணம் அடித்தாலும் பாஜக காலூன்ற முடியாது: திருமாவளவன்

குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 09:44 GMT

முப்பெரும் விழாவில் பேசும் திருமாவளவன்

கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அதற்கு முதல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் எனவும் நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு அண்ணன் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என்றார்.

கேரளாவில் ஒரு நடிகரை வைத்து பாஜக ஒரு இடத்தை பெற்றுள்ளனர் என்றும் தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான் என்றவர் எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என்ற அவர் தேசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் அண்ணன் ஸ்டாலின் தொடர் வெற்றியை,

பெற்று வருவதாகவும் இதற்கு அனைத்து காரணம் அவரது ஸ்டாலின் ஆளுமை தான் என்றார்.ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி மாறும் அப்படி பட்ட கூட்டணி தான் அதிமுக பாஜக கூட்டணி ஆனால் நான்கு தேர்தல்களை சந்தித்தும் திமுக கூட்டணியில் சிதைவு இல்லை என்றார். மழைக்கால தவளை போன்று ஒருவர் தாமரை மலரும் தாமரை மலரும் என கத்திக் கொண்டு இருந்ததாகவும்,

திராவிட அரசியல் இந்தியா கூட்டணி தோல்வி அடையும் சொல்லிக் கொண்டு இருந்தார் ஆனால் நான் பார்த்துக் கொள்கிறேன் என நேரடியாக களம் கண்டவர் ஸ்டாலின் என்றார்.திருமாவளவன் எதிராக பரப்பபடும் கருத்துகளுக்கு பொருட்படுத்தாமல் அனைத்து அமைச்சர்களை வேலை செய்ய வைத்தவர் முதல்வர் என்றும் திமுக வேட்பாளர் என அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை பார்க்க வைத்ததுடன்,

இந்தியா முழுவதும் பயணம் செய்து அரவிந்த கேஜிர்வால் இந்தியா கூட்டணி கொண்டு வந்ததுடன் அகில இந்திய அளவில் கூட்டணி உருவாக்க முயற்சி செய்தவர் ஸ்டாலின் தான் என்றார்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என செயல்பட்டதாகவும் பாஜகவை தனிமை படுத்த கூட்டணியை உருவாக்கியதாக கூறியவர் 40தும் நமது ஆகிவிட்டது ஆனால் நாடு நம்முடன் இல்லை ( தமிழ்நாடு நம்முடன் தான் உள்ளது ) மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இன்னும் வியூகம் வகுக்கும் நேரம் உள்ளது,

என்ற அவர் அதிமுக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்து உள்ளனர் எனவும் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றி கோவையில் பெற்று உள்ளோம் எனவும் இந்தியா கூட்டணி உருவகா அடித்தளம் இட்டவர் முதல்வர் என்றார்.இந்தியா கூட்டணி இன்னும் வலிமை பெற வேண்டியுள்ளது எனவும் பேசினார்.

Tags:    

Similar News