அனுமதியின்றி பாஜகவினர் இரு சக்கர வாகன பேரணி - பரபரப்பு
Update: 2023-12-03 11:08 GMT
இருசக்கர வாகன பேரணி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதன் காரணமாக திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முறையான அனுமதி பெறாததால் போலீசார் இருசக்கர வாகன பேரணி இல்லை அதன் காரணமாக செல்லக்கூடாது எனவும் கூறினர். இருந்த போதிலும் அதனை மீறி அதிவேகமாகவும் தலைக்கவசம் அணியாமலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பேரணியை நடத்தினர். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்