சோடாகான் கராத்தே பயிற்சி மைய மாணவிகளுக்கு கருப்பு பட்டை

சேலம் காந்தி மைதானத்தில் நடந்த விழாவில் சோடாகான் கராத்தே பயிற்சி மைய மாணவிகள் 12 பேருக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது.

Update: 2024-02-07 10:11 GMT

கருப்பு பட்டையுடன் மாணவிகள் 

வேல்ர்டு சோடாகான் கராத்தே டூ ஆர்கனைசேசன் இந்தியா’ கராத்தே பயிற்சி மையத்தில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் விழா சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாரதா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளூனி வித்யா நிகேதன் சி.பி.எஸ்.இ. பள்ளி, சூரமங்கலம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கலந்து கொண்டு 12 மாணவிகளுக்கு கருப்பு பெல்ட் வழங்கி பாராட்டினார். மேலும் 300-க் கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, காப்பி நிறம் உள்ளிட்ட பெல்டுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். இதில் சோடாகான் கராத்தே பயிற்சி மைய செயலாளர் குப்புராஜ், தலைமை பயிற்சியாளர் எஸ்.விச்சு கோபால கிருஷ்ணன், பயிற்சியாளர்கள் மணி, அருண் பிரபு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டினர்.
Tags:    

Similar News