சிவகாசியில் ரூ 4 லட்ச மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல்: ஒருவர் கைது

சிவகாசியில் ரூ 4 லட்ச மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-30 09:35 GMT
சிவகாசியில் ரூ 4 லட்ச மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல்.ஒருவர் கைது...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் சில பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் கருந்திரிகளை உற்பத்தி செய்ய உரிய அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் இது போன்ற பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தேவையான கருந்திரிகள் வெளியிடங்களில் இருந்து உரிய அனுமதியுடன் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.சில பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் கருந்திரிகள் கள்ளச்சந்தையிலிருந்து வாங்கி வந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கருந்திரிகள் உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதுபோன்ற சட்டவிரோதமாக கருந்திரிகள் தயாரிக்கும் போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடக்கிறது.

இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மீனாட்சி காலனியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன் படுத்தப்படும் கருந்திரிகளை தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனை செய்த போது 50 அட்டை பெட்டிகளில் கருதிரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதனை கைப்பற்றிய போலீசார் கதிரேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News