இன்சூரன்ஸ் வழங்காததை கண்டித்து வட்டார ஒருங்கிணைந்த  வேளாண்மை மையம் முற்றுகை

இன்சூரன்ஸ் வழங்காததை கண்டித்து வட்டார ஒருங்கிணைந்த  வேளாண்மை மையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-25 11:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா சீனங்குடி,சோழந்தூர், தும்படைக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் விவசாயம் பார்த்து வருகின்றனர் போதிய மழை இல்லாததால் பயிர்கள் அனைத்தும் கருகி நாசமாகியது. மேலும் தும்படைக் கோட்டை கிராமத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீர் வராததால் அங்கு விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

இதற்கான காப்பீடு வழங்க கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் முறையாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்தனர். கிராம மக்களின் மனுவை பெற்றுக்கொண்ட வேளாண்மை விரிவாக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட பெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் கிராம மக்கள் கூறினார்

Tags:    

Similar News