திருப்பத்தூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Update: 2023-11-14 12:07 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூர் அருகே ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யாததாலும் ஊராட்சி மன்ற தலைவரின் அராஜக போக்கை கண்டித்தும் பொதுமக்கள் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு ஊராட்சி கொட்டாவூர் பகுதியில் ஒரு மாத காலமாக சரிவர ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

மேலும் அதே பகுதியில் 1 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டும் அதிலிருந்து தண்ணீர் விடாமல் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவருடைய கணவர் முருகன் ஆகியோர் இந்த போர்வில் நான் போட்டது அதனால் யாருக்கும் தண்ணீர் விட முடியாது எனக்கூறி பொதுமக்களிடம் அராஜகப் போக்கில் ஈடுபட்டுள்ளார்.

அதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் அமர்ந்து அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் மற்றும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேசி உடனடியாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News