மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 07:31 GMT
விருதுநகர் பாவாலி ஊராட்சியில் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஊராட்சி தலைவரின் கணவர் மகாலிங்கம் துாண்டுதலின் பேரில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் அய்யனார் நகர் தேவர் சிலை முன்பு 40 அடி சாலை உள்ளது.
இங்குள்ள மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல், மின் இணைப்பை துண்டிக்காமல் ஊராட்சி தலைவரின் கணவர் மகாலிங்கத்தின் துாண்டுதலின் பேரில் வெட்டப்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கொடி மரப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாரியப்பன் பேச்சுவார்த்தை நடத்திய பின் மக்கள் கலைந்து சென்றனர்.