ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் !
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-14 09:48 GMT
இரத்ததான முகாம்
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நிறுவன தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கல்லூ ரியின் தாளாளர் கே.கே.பாலு சாமி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பேராசிரி யர்கள், மாணவர்கள் உள்பட மொத்தம் 51பேர் ரத்ததானம் செய்தனர். முகாமில் நிறுவன பொருளாளர் டாக்டர் ஏ.விஜயகுமார், கல்லூரியின் முதல்வர் சங்கர சுப்பிரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்ட னர். முகாமுக்கான ஏற்பாடு களை இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கள் மோகனபிரியா, பி.சத்யா, செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் வி.சத்யா, திருவருட்செல்வி ஆகியோர் செய்தனர்.