குருவிக்கரம்பையில் ரத்ததான முகாம் 

குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைப்பெற்றது.

Update: 2024-06-16 14:30 GMT

ரத்ததான முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில்  ரத்ததான முகாம் நடைபெற்றது . தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது .முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தலைமை வகித்தார் .

பட்டுக்கோட்டை அரசு ரத்த வங்கி  அலுவலர் டாக்டர் சீனிவாசன், டாக்டர் ரேவதி, தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட தலைவர் மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . முகாமில் 15 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு பட்டுக்கோட்டை அரசு ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது முகாமில்  தமிழக வெற்றிக்கழகம் சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியத் தலைவர் அருள்முருகன், பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் விக்னேஷ், மற்றும் நிர்வாகிகள் ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்( பொ) முருகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் ராம்குமார், ஹரிகரன், ஜீவா, முகுந்தன் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News