முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்- அதிமுக சார்ப்ப்பில் ரத்த தான முகாம்
ரத்த தான முகாமில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்;
Update: 2023-12-11 02:29 GMT
ரத்த தான முகாம்
இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க முன்னால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின்படி புதுக்கோட்டை கிழக்கு ஒன்றியம், கவிநாடு மேற்கு ஊராட்சி கிளைக்கழகம், IT wing சார்பாக இரத்ததான முகாம், அகரப்பட்டியில் நடைபெற்றது. இரத்ததான முகாம், ஒன்றிய மகளிரணி துணைச்செயலாளர் M.அமுதவள்ளி ஏற்பாட்டில், நகர கழக செயலாளர்கள் க.பாஸ்கர், SAS.சேட், மாவட்ட பாசறை செயலாளர் ப.கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் பழனிவேலு, மாவட்ட மகளிரணி செயலாளர் அன்னலெட்சுமி, IT Wing சதீஷ், முகம்மது இப்ராஹிம், ஒன்றிய கழக நிர்வாகிகள் தலைவர் சூர்யா மணிகண்டன், கவிநாடு இராஜசேகர், சிவயோகமலர், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.