அடித்துச் செல்லப்பட்ட தென்னை மரங்கள்
கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தென்னந்தோப்பிலுள்ள பழமையான தென்னை மரங்களை அடித்துச் செல்லப்பட்டன.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பருக்கானது போடி அருகே பெரியாத்து கோம்பை பாலம் அருகே கனி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தென்னை மரங்களை அடித்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
வெள்ள நீரில் சாய்ந்த தென்னை மரம் பெரியாத்து கோம்பை பாலத்தின் மேற்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ளது. சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த 20 துக்கும் மேற்பட்ட தென்னை மரத்தை இழந்த தோட்டத்தின் உரிமையாளர் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து மழை பெய்வதாலும் நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் கரையோர உள்ள 10க்கும் மேற்பட்ட மரங்கள் வெள்ளநீரில் அடுத்து செல்லும் சூழ்நிலையில் உள்ளது.