நடுக்கடலில் பற்றி எறிந்த படகு - மீனவர்கள் காயம்

சீர்காழி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது பெட்ரோல் டேங்க் வெடித்த்தில் பைபர் படகு எரிந்து சேதமானது. படகில் இருந்த 6 மீனவர்கள் காயத்துடன் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

Update: 2024-01-19 05:20 GMT

சேதமடைந்த படகு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு பேரும் கடற்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் தூரம் கடலில் நள்ளிரவு மீன் பிடித்து கொண்டிருந்தனர்,

அப்போது பைபர் படகின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து சிதறியது இதில் படகு தீ பற்றி எரிய தொடங்கியது படகில் இருந்த ஆறு பேரும் தீக்காயங்களுடன் கடலில் குதித்து சத்தம் போட்டு உள்ளனர் அருகில் இருந்த மற்ற மீனவர்கள் அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் படகு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது படகின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும், காயமடைந்த அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இது குறித்து கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இந்த தீ விபத்தால் திருமுல்லைவாசல் மீனவ கிராம மக்கள் வேலை நிறுத்த அறிவிப்பு விடுத்துள்ளனர் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

Tags:    

Similar News