திண்டிவனத்தில் தூக்கில் வாலிபர் சடலம் - போலீசார் விசாரணை
திண்டிவனத்தில் வாலிபர் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கிய நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 07:05 GMT
பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மதியம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் இது பற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மர்ம மான முறையில் மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்த வாலிபரின் உடலை கைப்பற்றி யார் அவர்? என அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபர் திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த கன்னியப்பன் மகன் கார்த்திக்(வயது 26) என்பதும், திருமணம் ஆகாத இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே போலீசார், கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்து மரத்தில் தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.