சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-04 02:05 GMT

சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கையை அடுத்துள்ள முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருக்கு அதே கிராமத்தில் 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் தற்சமயம் நெல் நடவு செய்யப்பட்டு உரமிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வயல்வெளியின் கடைசி பகுதியில் உரமிட செல்லும்போது சுப்ரமணியனுக்கு துர்நாற்றம் அடிக்கவே சுற்றி பார்த்ததில் புதர் ஒன்றிற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை அடுத்து சுப்ரமணியன் உடனடியாக சிவகங்கை தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக அங்குவந்த காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுவருவதுடன் சம்பவ இடத்திற்கே மருத்துவக்குழுவினரை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனர். மேலும் இறந்த நபர் யார்? என்றும் அவரை எவரேனும் கொலை செய்து இங்கு சடலத்தை வீசி சென்றனரா? என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News