ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத முதியவர் உடல்
கள்ளகுறிச்சி மாவட்டம், மஞ்சபுத்துார் ஏரியில் அடையாளம் தெரியாத முதியவர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-04-14 12:29 GMT
ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத முதியவர் உடல்
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் ஏரியில் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இந்து கிடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்து. சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சம்பவ இடத்திற்குச் சென்ற, உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த முதியவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.