திட்டுப்பாறையில் எல்பிபி கால்வாயில் மூதாட்டியின் உடல் மீட்பு
காங்கேயம் அருகே எல்பிபி கால்வாயில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் மீட்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-09 11:57 GMT
மீட்கப்பட்ட மூதாட்டி சடலம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த திட்டுப்பாறையில் சுமார் 4 மணி அளவில் அளவில் அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மூதாட்டியின் உடல் தண்ணீர் மிதந்து வந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு காங்கேயம் போலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூதாட்டி யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? இந்த இறப்பு கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.