திருப்பூர் புத்தக திருவிழாவில் இத்தனை கோடிக்கு புத்தகங்கள் விற்பனையா?

திருப்பூரில் 10 நாட்களாக நடந்த புத்தக திருவிழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்றனர்.

Update: 2024-02-07 09:25 GMT

திருப்பூரில் 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.1.40 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் பேர் பங்கேற்றனர் என நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி திருப்பூர் புத்தகத் திருவிழா தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து, 20-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா  கடந்த  மாதம் 25-ந் தேதி முதல் கடந்த 4&ந் தேதி வரை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல்  வளாகத்தில் நடந்தது.

இந்த புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 157 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 6 அரசுத்துறை சார்ந்த அரங்கங்கள்  இடம்பெற்றன. தினமும் காலை 11.00 மணிக்கு புத்தகக் கண்காட்சி தொடங்கி இரவு 9.30 மணி  நடந்து வந்தது. அனுமதி இலவசம் என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்து மகிழ்ந்தனர்.

புத்தகத் திருவிழாவில் அறிவியல், வரலாறு, அரசியல், பண்பாடு, கதை, கவிதை, நாவல், குழந்தை இலக்கியம், சுய முன்னேற்றம், பொருளாதாரம், மனநல உளவியல், ஆன்மீகம் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டிருந்தன.  

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தேவையான புத்தகங்கள்  இருந்தன. புத்தகக் கண்காட்சியில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி போன்றவையும்  தினமும் நடந்து வந்தன. பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் சிறப்புரையும் ஆற்றினார்கள்.

திருப்பூர் புத்தக திருவிழாவில் 10 நாட்களையும் சேர்த்து ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர். உத்தேசமாக ரூ.1 கோடியே 40 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையானது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News